உங்கள் செல்போனுக்கு Phone Case அல்லது Back Cover போடாமல் விட்டால் என்னவாகும் தெரியுமா?
செல்போன் என்பது இன்றைய உலகில் அனைவருக்கும் அத்தியாவசிய தேவைக்கான ஒரு சாதனமாகிவிட்டது.
செல்போனில் பலரும் Back Cover போட்டு உபயோகிப்போம், அதே போல பலரும் Back Cover அல்லது phone case இல்லாமலும் உபயோகிப்போம்.
செல்போனில் Back Cover போட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்
செல்போனுக்கு Back Cover போடுவதால் அது நாகரீகமான மற்றும் அழகான தோற்றத்தை அளிக்கிறது. மொபைல் கேஸ்களின் சமீபத்திய மொடல்கள் தொடுதிரையை எளிதாகப் பாதுகாத்து, அதைச் சரியாகப் பயன்படுத்தவும் உதவுகிறது.
Back Cover மற்றும் மொபைல் கேஸ்கள் நமது போனை கீழே விழுவதிலிருந்து திறம்பட பாதுகாக்கிறது மற்றும் சேதங்களை சமாளிக்கிறது, இதை போடாமல் இருந்தால் சேதம் அதிகமாகும்.
பேக் கேஸ்கள் உங்கள் சாதனத்துக்குள் வரும் தூசி பிரச்சனைகளை சமாளிக்க உதவும். இது உங்கள் மொபைலின் செயல்பாட்டு சக்தியைத் தக்கவைக்கவும் செயல்படுகிறது.
உங்களிடம் விலையுயர்ந்த மொபைல் இருந்தால், பாதுகாப்பிற்காக உயர்தர பேக் கேஸ்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.