தேனில், மிளகு தூளை கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? சளியை விரட்டும் அருமையான வீட்டு வைத்தியம்!
உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்குமானால் இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேனில் 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். இப்படி சாப்பிட்டு தூங்குவதால் உடலுக்குள் செல்லும் மிளகுத் தூளும், தேனும், சளியை திறம்பட கரைத்து வெளியேற்றும்.
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்களானால் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டியது அவசியம். அதற்கு மிளகு நீரைக் குடிக்கலாம். சளியின் காரணமாக அஜீரண கோளாறால் அவதிப்பட்டு வந்தால் மிளகுத் தூளை தேனுடன் உட்கொள்ளுங்கள்.
இதனால் வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். தினமும் மிளகு தூளில் தேன் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..