ஐஸ் கட்டி கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்க அனைவரும் விரும்புவோம் அந்தவகையில் ஐஸ் மசாஜ் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது.
முக்கியமாக சருமத்தின் ஒரே இடத்தில் 12 நிமிடங்களுக்கு அதிகமாக ஐஸை வைக்கக்கூடாது. அப்படி செய்தால் சருமம் மறத்துப்போய்விடும்.
ஐஸ் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
கிடைக்கும் நன்மைகள்
சீரான இரத்த ஓட்டத்திற்கு ஐஸ் உதவி செய்கிறது. இரத்த ஒட்டம் சீராக இருந்தால் சருமம் பொலிவு பெறும். ஆகவே ஐஸ் கட்டிகளில் இருந்து வடியும் குளிா்ந்த நீரை சருமம் முழுவதும் தேய்த்தால் சருமம் பொலிவாக தோற்றமளிக்கும்.
சருமத்தில் வீக்கம் இருந்தால், அல்லது சருமம் கண்ணிப்போய் சிவந்து இருந்தால், அல்லது சருமத்தில் தழும்புகள்இருந்தால், ஐஸைக் கொண்டு மசாஸ் செய்யலாம். அது அவற்றைக் குறைக்கும்.
அது போல் முகப்பரு இருந்தாலும், அதன் மீது ஐஸைக் கொண்டு மசாஜ் செய்தால், அந்த இடம் முழுவதும் சுத்தமாகி முகம் புதுப் பொலிவு பெறும்.
வெள்ளாிக்காய் சாற்றையும், ரோஸ் தண்ணீரையும் உறைய வைத்து, அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, அந்தக் கலவைக் கொண்டு கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்தால், கருவளையங்கள் நீங்கும்.
ஐஸ் மசாஜ் செய்யும் போது, அது தசைகளை ஊடுருவி சருமத்தை சுத்தம் செய்கிறது. ஒப்பனை செய்வதற்கு முன்பாக ஐசைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகள் சுத்தமாகும்.
ஐஸ் மசாஜ் செய்தால், சருமத்தில் மிக எளிதாக சுருக்கங்கள் ஏற்படாது. முகமானது நீா்ச்ச்த்துடன் இருக்கும்.
மேலும் முகத்தில் முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படாது. ஆகவே சருமத்தைப் பாதுகாக்க, சருமத்தைப் புதுப் பொலிவுடன் பராமாிக்க அடிக்கடி ஐஸ் மசாஜ் செய்யுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |