அன்றாட உணவில் இந்த ஊத நிற காயை சேர்த்துக்கோங்க.. பல நன்மைகளை வாரி வழங்குமாம்
Diabetes
cholesterol
blood cells
weight loss
By Kishanthini
காய்கறி வகைகளில் ஒன்றான கத்தரிக்காய், சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள உணவாக காணப்படுகின்றது.
அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மேலும் நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.
இதனை அன்றாடம் எடுத்து கொள்வதனால் உடலுக்கு நல்ல பலன்களை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- கத்தரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கிறது.
- கத்தரிக்காயில் இருக்கக்கூடிய ரசாயனங்கள், உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் அதாவது டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றுகின்றன.
- கத்தரிக்காயில் உள்ள விட்டமின் கே, இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தவிர்க்கிறது. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
- கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இயற்கையாகவே நுரையீரலில் இருக்கக்கூடிய கெட்ட கிருமிகள், தூசிகள் எல்லாமே சளி மூலமாக வெளியேறி நுரையீரலும் சுத்தமாகும்.
- கத்தரிக்காயை வறுத்துச் சாப்பிடுவது பயனற்றது, எனவே கத்தரிக்காயை சமைத்து சாப்பிடுவது நல்லது. கத்தரிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
- கத்தரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இரத்தக் குழாய்களில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரைகிறது, இதய தசைகள் நன்கு வலுப்பெறுகிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.
- கத்தரிக்காயில் கலோரிகள் இல்லை. எனவே கொழுப்பு சத்து இதில் இல்லை. அதுமட்டுமின்றி கத்தரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US