வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்துவதால் என்ன நடக்கும் தெரியுமா? பலரும் அறிந்திடாத உண்மை இதோ!
Health tips
Jaggery
White sugar
By Logeswari
பொதுவாகவே நமது முன்னோர்கள் பல வழிகளில் கருப்பட்டியை தங்களின் உணவு, காபி, டீ போன்றவைகளில் சேர்த்து கொள்வதுண்டு. அனைவரும் எந்த தயக்கமும் இன்றி கருப்பட்டி காப்பியை குடிக்கலாம்.
ஏன் சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனென்றால் டல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் இதில் நிறைந்துள்ளதால் உடல் ஆற்றலை கருப்பட்டி அதிகரிக்க செய்கிறது.
சரி வாங்க கருப்பட்டி பயன்படுத்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
நன்மைகள்:-
- கருபட்டியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது, இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.
- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது. கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது.
- குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது. கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
-
பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது. கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுக்கலாம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US