எது செய்தாலும் உடல் எடை குறையவில்லையா? அப்போ எலுமிச்சை நீரில் இதை கலந்து குடித்து பாருங்க!
உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது உடல் அழகு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் உடல் எடையை குறைக்க பலர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். சிலர் என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்ற குழப்பத்தில் உள்ளனர்.
உடலை ஒட்டி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சோர்வு இப்படி பல பிரச்னைகளை தாக்கும்.
எனவே நாம் பிட்டாக இருக்க வேண்டுமெனில் உடல் எடையை சீராக பராமரிப்பது அவசியம். அந்த வகையில் ஒரு சிறப்பான வீட்டு பானம் உங்களுக்கு உதவலாம். இதை எப்படி தயாரிப்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
வெல்லம்
தண்ணீர்
எலுமிச்சை சாறு
செய்முறை:-
வெள்ளத்தில் அளவுக்கு அதிகமாக மருத்துவ குணாதிசியங்கள் நிறைந்துள்ளது. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் வெல்லம் சேர்த்து கரையும் வரை கலந்து கொள்ளவும்.
ஒன்றில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவில் எலுமிச்சை சாறு சேர்த்து கொண்டு அடுப்பை அணைத்து விடவும். அதன் பிறகு இந்த பானத்தை குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் குறிப்பாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையை ஈசியாக குறைத்துவிடலாம்.
நன்மைகள்:-
பலரும் உடல் ஆரோக்கியம் கருதி சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்த சொல்வார்கள். ஏனெனில் அது வளர்ச்சிதை மாற்றத்தை வேகமாக்குகிறது. இதனால் உங்களின் தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கலாம். குறிப்பாக தொப்பை கொழுப்புக்கு நல்ல ஆதாரம்.
எனவே இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பருகும் போது அதன் ஆற்றல் இன்னும் வேகமாக இருக்கும். உடல் எடையை சீக்கிரமாகவும் குறைத்துவிடலாம். இவை இரண்டையும் ஒன்றாக கலக்கும்போது வைட்டமின் சி கிடைக்கிறது.