ஒரு எலுமிச்சையில் இவ்வளவு நன்மையா?
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
புளிப்பு சுவையுடைய எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகமுள்ளது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் வைட்டமின் சியின் பங்கு மிக முக்கியமானது.
இதுதவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன.
எலுமிச்சை இதய ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
ஒரு எலுமிச்சை சுமார் 31 மில்லிகிராம் வைட்டமின் சி வழங்குகிறது.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெதுவெதுபான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது சிறந்த பலன் கொடுக்கும்.
இதனை காலை உணவுக்கு முன் குடிப்பது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது, நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |