இந்த சீக்ரெட் தெரிந்தால் இனி எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க! ஏன் தெரியுமா?
எலுமிச்சை பழத்தோல் தேவையில்லை என்று நீங்கள் தூக்கி போடுபவராக இருந்தால் உங்களுக்கு தான் கண்டிப்பாக இந்த பதிவு உபயோகமாக இருக்கும்.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் எலுமிச்சை பழத்தை சாறு எடுத்ததும் வீணாக தூக்கி எறியும் அதன் தோல்களை பயன்படுத்தி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை ஈசியாக குறைத்து விடலாம்.
எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்த பழம். இதன் சாறை பானத்தில் இணைப்பு பொருளாகவோ, கலந்த சாதம் செய்யவோ பயன்படுத்துகிறோம். ஊறுகாயில் மட்டுமே எலுமிச்சையை தோலோடு பயன்படுத்துகிறோம்.
மற்ற நேரங்களில் எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து தோலை வெளியே வீசி எறிவதுண்டு. எலுமிச்சை தோலில் பயோ ஆக்டிவ் சேர்மங்களால் நிறைந்துள்ளது. சரி வாங்க மேலும் எலுமிச்சை தோலில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..