கடுகில் கொட்டி கிடைக்கும் ஏராளமான நன்மைகள்: அது என்ன தெரியுமா?
கடுகு சமையலில் பயன்படும் ஒரு சிறிய பொருளாகும். இது சமையலில் தாளிப்பிற்கு பயன்படுத்தப்படும்.
கடுகு தோற்றத்தில் சிறிதாக இருந்தாலும் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் அதிகம். கடுகு எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பல உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடைபெறலாம்.
கடுகு எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. இவற்றின் மூலம் என்ன மாதிரியான பிரச்சனைகளை சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
கிடைக்கும் நன்மைகள்
கடுகு உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் போராட உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள் காரணமாக, காயங்கள் விரைவில் குணமாகும். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய காயம்பட்ட இடத்தில் கடுகை நன்கு பொடியாகி காயம் உள்ள இடத்தில் தூவலாம்.
பல்வலி தொல்லை ஏற்படும்பொழுது, கடுகு காய்ச்சிய தண்ணீரைக் குடிப்பது அல்லது வாய் கொப்பளிப்பது நல்ல பலனைத் தரும்.
கடுகு மற்றும் கற்பூரத்தை பொடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து முழங்கால்களில் தடவவும். இவ்வாறு செய்வதால் மூட்டு வலி விரைவில் குறையும்.
கடுகை பொடியாக்கி, சிரங்கு, அரிக்கும் தோலழற்சியில் தடவவும். இப்படி செய்தால் பலன் தெரியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |