தினமும் 1 கப் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் முகம் கலர் ஆகுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஒரு நாளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்.
அதாவது ஃபிரெஷாக பிழிந்து எந்த கலப்படமும் இல்லாமல் அப்படியே குடித்தால் உடலில் அழற்சி எதிர்ப்புகளை எதிர்த்து போராடவும், ஆக்ஸிஜ்னேற்ற அழுத்தத்தை எதிர்கொள்வதற்கான திறனையும் 100 சதவீதம் அளிப்பதாக கூறப்படுகிறது.
நன்மைகள்:-
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அல்சரினால் குடலில் ஏற்படும் பாதிப்பை தடுத்து செரிமான மண்டலத்தை சரி செய்கிறது.
தினமும் மறக்காமல் 1 கப் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் முகம் வெண்மை அடையும். ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது.
தினமும் காலையில் சில ஆரஞ்சு பழங்களை பிழிந்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிது கருப்பு மிளகுத்தூள் சேர்த்து காலை உணவுகளைச் சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு முதுமை, தோல் சுருக்கம் போன்ற அழகு நலன்களும், ஆரோக்கிய நலன்களும் கிடைக்கும்.