அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாதாம்
அன்றாட உணவில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
வயிற்றுப்போக்கு
ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை. மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வாருங்கள்.
புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கும்
அற்புதமான மற்றொரு நன்மை என்னவெனில், ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
மலச்சிக்கலுக்கு தீர்வு
பெரும்பாலானோருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், உண்மையில் ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வைட்டமின்கள் நிறைந்தது
ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தான் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
எடை குறைப்பு
அன்றாடம் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். எப்படியெனில் ரசம் சேர்ப்பதால், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் அந்த டாக்ஸின்களானது வியர்வையின் மூலமாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேறும்.
ரசத்தில் பல வகைகள் உண்டு பூண்டு ரசம், தூவளை ரசம், வெங்காய ரசம், தக்காளி ரசம், புளி ரசம் போன்ற பலவகைகள் உண்டு.
ஆனால் புளி சேர்க்கப்பட்ட ரசத்தை சிலர் சாப்பிடக்கூடாது. அதாவது, இதய நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு புளி கூடாது.
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமட்டாயிட் ஆர்த்ரைடிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் புளி வேண்டாம். அது அவர்களது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.
அலர்ஜி பிரச்னை உள்ளவர்களும் புளி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவார்கள். நீரிழிவு நோயாளிகளும் புளியை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது.