சிவப்பு மிளகாய் தூளில் இவ்வளவு நன்மையா? ஆனால் எச்சரிக்கை அவசியம்
பொதுவாக நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிவப்பு மிளகாய் தூள் பல நன்மைகளை கொண்டது.
இந்த சிவப்பு மிளகாய் தூளானது செரிமானத்திற்கும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவுகிறது.
அதுமட்டுமின்றி இதில் பல நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. அந்தவகையில் தற்போது இவற்றால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- இரத்த அழுத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிவப்பு மிளகாயில் உள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களை இலகுவாக்கி ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
- சிவப்பு மிளகாயில் உள்ள வைட்டமின் சி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவ்வப்போது ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க உதவுகிறது.
- சிவப்பு மிளகாயில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை நமது தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- தசைகளில் அல்லது மூட்டு இணைப்புகளிலும் வலி அதிகம் இருந்தால் சிவப்பு மிளகாய் அதற்கு நல்ல தீர்வு. இது அழற்சி தன்மையை குறைப்பதுடன் வலியையும் குறைக்க உதவுகிறது.
- தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: ஆனால் நேரடியாக நாம் சிவப்பு மிளகாய் தூளை சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.
- செரிமானத்திற்கு உதவுகிறது: சிவப்பு மிளகாய் நமது செரிமான திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் தீர்வு தருகின்றது.
முக்கிய குறிப்பு
அதிக அளவு சிவப்பு மிளகாய் தூளை நாம் உணவில் பயன்படுத்தும் போது அவை வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.