ஒரு மாதத்திற்கு இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
பொதுவாக நாம் அதிகமாக இனிப்புகளை எடுத்துக்கொள்வது பற்களை சேதப்படுத்தும் மற்றும் உங்கள் எடையை அதிகரிக்க செய்யும்.
மேலும், அதிக சர்க்கரை சாப்பிடுவது நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில், ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் வெற்று கலோரிகளை நீக்கி எடை இழப்பிற்கு வழிவகுக்கிறது.
மேலும், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது. நாள் முழுவதும் ஆற்றல் அளவுகள் மிகவும் நிலையானதாக இருக்கும்.
சர்க்கரையைத் தவிர்ப்பது வாய் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஈறு நோய் அபாயத்தைக் குறைக்கும்.
மேலும், சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.
சர்க்கரை உட்கொள்வது முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரையை தவிர்ப்பது சரும ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
குறிப்பாக, மனநிலை மாற்றங்களை குறைக்கும் மற்றும் மன தெளிவை மேம்படுத்தும்.
அதிக சர்க்கரை உட்கொள்வது குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைக்கும். எனவே, சர்க்கரையை குறைப்பது குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |