பெண்களே.., சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
அன்றாட உணவில் சேர்க்கப்படும் சீனி எனப்படும் வெள்ளை நிற சர்க்கரையை பார்த்தாலே மக்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு விடுகிறது.
அதிகமாக வெள்ளை சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை பற்றி விரிவாக காணலாம்.
அதிக சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகள்
அளவுக்கு அதிகமான சர்க்கரை சத்து உடலில் ஏற்படும்போது அதனால் ஹர்மோன் சமநிலை பாதிப்பு அடையக் கூடும்.
குறிப்பாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்படும் மற்றும் அழற்சி உண்டாகும்.
பெண்களைப் பொருத்தவரையில் மாதவிலக்கு காலத்தில் வயிற்றுப்பிடிப்பு, உப்புசம் மற்றும் எண்ண தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
ஆனால், சர்க்கரையை மட்டும் குறைத்துக் கொண்டால் இதற்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடாது சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவுதான் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முழு தானியங்கள், மெல்லிய புரதம், வெவ்வேறு வகையான பழங்கள், பருப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கும்.
குறிப்பாக சர்க்கரையால் ஏற்படுகின்ற அழற்சி காரணமாக மாதவிலக்கு கால வயிற்றுப்பிடிப்பு கடுமையாக இருக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை தவறுகின்ற பிரச்சனையை தவிர்க்க முடியும்.
சர்க்கரையை எப்படி குறைப்பது?
மாதவிலக்கு காலத்தில் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை பெண்களிடம் அதிகரிக்கும். அதே சமயம், சர்க்கரை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.
செயற்கையான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் ஆபத்தானவை. அதற்குப் பதிலாக முழு தானிய உணவுகள், நிறையூட்டப்படாத இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
வெல்லம், பேரீட்சை, நாட்டு சர்க்கரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கிற போது, மனதின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடைபயிற்சி, அரட்டை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |