வயது முதிர்வை தடுத்து, பளபளப்பான சருமத்தை பெற இதை ஒன்றை மட்டும் தேய்த்து குளிங்கள்: என்ன தெரியும்?
அன்றாட வாழ்வில் நாம் எப்பொழுதும் போல குளிப்பதை விட எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றன.
இதனால் தான் தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது “ஆழமான அடையாளத்தின்” பாரம்பரியமாகப் பார்க்கப்படுகிறது.
உடல் முழுவதும் எண்ணெய்யை தேய்த்த பிறகு சூடான நீரில் குளிப்பது உடலில் உள்ள அசுத்தங்கள் அகற்றப்பட்டு, மிகுந்த புத்துணர்ச்சி கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் பல நன்மைகள் நம் உடலுக்கு வந்தடையும். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு செதில்கள் உண்டாகும்போது எண்ணெய் தேய்த்து குளித்தால், சருமம் வறட்சி அடைவதை தடுத்து ஈரப்பத்தடுத்துடன் வைத்துக்கொள்ளும்.
உடலில் எண்ணெய்யை தேய்த்து மஸாஜ் செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் தோலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
மேலும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதனால் சரும செல்களுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனும், ஊட்டச்சத்தும் மேம்படும்.
தொடர்ந்து எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் சருமம் நன்கு ஊட்டமடைந்து வயது முதிர்ந்து காணப்படுவதை தவிர்க்கலாம்.
எள் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது சருமத்தை இயற்கையாகவே பளபளபாகவும், பிரகாசமாகவும் காண்பிக்கும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் மட்டுமின்றி மனதிலும் தளர்வு ஏற்படுத்தி மன அழுத்தம் குறைந்து, மனதை அமைதிப்படுத்தவும் முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |