உடல் எடையை குறைக்கும் திரிபலா.. எப்படி உட்கொள்ளலாம் தெரியுமா?
திரிபலா என்பது ‘மூன்று பழங்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இது இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளான tri மற்றும் phala விலிருந்து உருவானது. மூலிகைகளான கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையாகும்.
உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சித்தமருத்துவர்களால், மனித உடலின் பித்தம், கபம், வாதம் போன்றவை சமன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சாத்தியமான பயன்பாடுகள் மற்றும் பலன்களைக் கொண்ட ஒரு பல்துறை மூலிகையாக உள்ளதுதான் திரிபலா.இது ஆயுர்வேதத்தில் "Tridoshic Ramayana" என்று கருதப்படுகிறது.
திரிபலாவின் பயன்கள்:
i. தீவிரமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுதல்
ii. இரத்தத்தை சுத்தப்படுத்துதல்
iii. இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்ககூடும்
iv. பாக்டீரியா தொற்றிலிருந்து விடிவு பெறுதல்
v. வீக்கத்தைக் குறைத்தல்
vi. வலிக்கு நிவாரணம் அளித்தல்
vii. குடல் ஒழுங்குமுறையை ஊக்குவித்தல்
திரிபலாவின் நன்மைகள்:
1. Oral Health Benefits :
பல்வேறு பற்பசைகள் மற்றும் mouthwash களில் திரிபலா ஒரு மூலப்பொருளாக உள்ளதனால் Plaque எண்ணிக்கை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி ஈறின் வீக்கத்தைத் தணிக்கிறது.
2. கீல்வாதம்:
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த திரிபலா மூட்டுவலி மற்றும் மூட்டு விறைப்பை நிர்வகிக்க உதவுகிறது. நச்சுகளை வெளியேற்றி யூரிக் அமிலத்தை குறைத்து கீல்வாதம் போன்ற நிலைமைகளுக்கு தீர்வளிக்கிறது.
3. Aiding Hair Stimulation:
திரிபலா பளபளப்பைச் சேர்க்கும் மற்றும் இயற்கையான முடி நிறத்தை பராமரிக்க, முடியை வலுப்படுத்த மற்றும் வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி முறிவு மற்றும் பிளவு முனைகளைத் தடுக்கிறது.
4. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்:
இதில் வைட்டமின்-ஏ இருப்பதால் cataracts, glaucoma, conjunctivitis, மற்றும் UV damage போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுவுபெற அல்லது பாதுகாக்க உதவுகிறது.அதுமட்டுமின்றி கண் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
5. Effective Digestive Support:
திரிபலா செரிமான ஆரோக்கியம், வழக்கமான குடல் இயக்கம் மற்றும் செரிமான பிரச்சனைகளை போக்க போன்றவைக்கு தீர்வளிக்கிறது.
6. உடல் பருமன் :
இது உடல் பருமன் மேலாண்மையில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் செரிமானத்திற்கு உதவும், எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
7. புற்றுநோயை தடுக்க:
திரிபலா அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நச்சுத்தன்மையின் காரணமாக புற்றுநோய் சிகிச்சையை ஆதரிப்பதில் சாத்தியமான நன்மைகளைக் கொண்டிருக்கலாம்.
திரிபலாவை எப்படி எல்லாம் உட்கொள்ளலாம்?
1. திரிபலா சூர்ணா பொடி:
உறங்கப்போவதற்குமுன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்து கிளறி குடித்து வருவது செரிமானதிற்கு நன்மையளிக்கும்.
2. திரிபலா குவாதா டிகாஷன்:
திரிபலா பொடியை 1 கப் வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். செரிமான tonic ஆக வடிகட்டி உட்கொள்ள வேண்டும்.
3. திரிபலா தைலா எண்ணெய்:
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த திரிபலா எண்ணெயை சூடாக்கி உச்சந்தலையில் massage செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |