தயிரை சமையலில் பயன்படுத்துவது சரியா? தவறா?
தயிர் என்பது குளிர்ச்சியான பானமாகும். உடல் சூட்டை தனித்து நமக்கு ஆரோக்கியம் தருகிறது.
தயிரை பெரும்பாலும் மதிய உணவு வேளையில் உண்பது வழக்கம். கால்சியம், வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B12, பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
தயிரானது Probiotic சத்து நிறைந்தது. இதை மோர் குழம்பு, பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் புளிப்புச் சுவைக்காக சேர்ப்பது, இறைச்சிகளை எளிதாக வேக வைக்க சேர்ப்பது என்று சமையலில் பயன்படுத்தி வருகிறோம்.
தயிரின் நன்மைகள்
எலும்புகள் பலமடைய தயிரை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.கு டலின் நுண்ணுயிர்களை பெருக்க இதிலுள்ள Probiotic சத்து உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது, அதுமட்டுமின்றி தயிரில் உள்ள புரதமானது தசை வளர்ச்சிக்கும் தசையை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்த மற்றும் ஆற்றலை கொடுக்க தயிரில் உள்ள வைட்டமின் பி-12 சத்துக்கள் உதவுகிறது.
தயிரை சூடுசெய்வதனால் என்ன ஆகும்?
தயிரை சூடுசெய்வதானால் அதன் ஊட்டச்சத்து அளவுகள் குறைகிறது, நன்மை குறைகிறது என்றும் தெரியவந்துள்ளது. சமைக்கும்போது அல்லது அதை சூடுபடுத்தும்போது அதன் புரத தன்மையானது இழக்கப்படுகிறது. இதனால் தயிரின் இயற்கை ஊட்டச்சத்தானது குறைகிறது.
தயிரானது மிக கெட்டியாக மாறுவதன் மற்றும் தன்மை இழப்பதன் காரணம் என்னவென்றால் அதை சூடுபடுத்தும்போது அதன் ஈரத்தன்மையானது காணாமல் போகி நீர்ச்சத்தானது தனியாக வந்து விடுகிறது.
தயிரை பதப்படுத்துவதன் வாயிலாக அதை சூடு செய்கின்றனர். அப்படி செய்யும்போது தேவைற்ற பாக்டீரியாக்களானது கொல்லப்படும்.
தயிரை சூடு செய்து சாப்பிடும் சுவையும் அதை பச்சையாக சாப்பிடும் சுவையிலும் மணம் மாற்றமானது கண்டிப்பாக இருக்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |