பெண்கள் சீப்பு வளையல் அணிவதால் வீட்டில் செல்வம் பெருகும் - வாஸ்து நிபுணரின் கருத்து
பண்டைய காலத்திலும் தற்போதைய நவீன காலத்திலும் பெண்களுக்கான தனி அழகை தருவது அவர்கள் அணியும் வளையலாக தான் இருக்கும்.
குறிப்பாக திருமணமான பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்ற ஒரு ஐதீகமும் இருக்கிறது.
உணவு பரிமாறும் போதும், கோவிலுக்கு செல்லும் போதும் பெண்கள் வளையல்கள் அணிவது அவசியம்.
வளையல்களில் பல வகைகள் உள்ளன. அதாவது கண்ணாடி வளையல், தங்க வளையல், வெள்ளி வளையல், செம்பு வளையல், பிளாஸ்டிக் வளையல், மெட்டால் வளையல், முத்து வளையல், பேன்சி வளையல், நூல் வளையல், பிளாஸ்டிக் வளையல்கள் என விதவிதமாக உள்ளன.
அந்த வகைகளில் சீப்பு வளையல் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீப்பு வளையல் அணிவதன் முக்கியத்துவம்
திருமணமான பெண்களுக்கு 16 சிருங்காரம் செய்வது மிகவும் முக்கியமானது மற்றும் மங்களகரமான சடங்காகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சடங்கின் போது திருமணமான பெண்ணிற்கு பல வகையான சிகை அலங்கார பொருட்கள் வழங்கப்படும்.
அதில் வளையல் வழங்குவதும் வழக்கம். கூடுதலாக வளையல் அணிந்து இருப்பது வீட்டில் நேர்மறையை அதிகமாக பரப்பும்.
சீப்பு வளையல் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
சீப்பு வளையலானது ஜோதிடத்தில் லட்சுமி தேவியுடன் தொடர்புடையவை மற்றும் செல்வத்தின் சின்னமாக நம்பப்படுகிறது.
திருமணமான ஒரு பெண் இதை அணிந்தால், கணவனுக்கு ஒருபோதும் நிதி நெருக்கடி ஏற்படாது, மேலும் பெண்ணின் ஜாதகத்தில் சந்திரனின் நிலையும் வலுவடையும் என நம்பப்படுகிறது.
இது ஒரு பெண்ணின் மனதையும் அமைதியுடன் வைத்திருக்க உதவும்.
அணிவதன் மூலம் இதய நோய்களைத் தடுக்கலாம். எனவே, நல்ல ஆரோக்கியத்திற்காகவும் இதை அணியலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |