வெள்ளி நகைகள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்! இதோ
நகைகள் அணிவது நம் பாரம்பரியத்தின் முக்கிய கூறில் ஒன்றாக கருதப்படுகிறது. உடலில் ஒரு சில இடங்களில் அணிவதற்கென தனித்தனி நகைகள் உள்ளன.
இந்த நகைகள் அழகிற்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகிறது. எனவே வெள்ளி நகைகள் அணிவதால் பல நன்மைகள் உண்டாகும்.
உண்டாகும் நன்மைகள்
தங்க நகைகள் நம் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
தங்கம் எப்போதும் நம் உடலை உறசிக்கொண்டே உள்ளதால் தங்கத்தில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. ஆபரணங்கள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி, முத்து, பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் பல நன்மைகள் உண்டாகிறது.
தங்கத்தில் மகாலட்சுமி குடியிருப்பதால், அதனை காலில் அணியக்கூடாது என்பதால் தான். கொலுசை மட்டும் தங்கத்தில் அணியாமல் வெள்ளியில் அணிகிறோம் , காலில் அணியும் எல்லா நகைகளும் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.
வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
குழந்தைகளுக்கு அதிக முத்துக்களை கொண்ட கொழுசு அணிந்து விடுவதால், அவர்கள் உள்ள இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |