பிரித்தானியாவில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் 270,000 இளைஞர்கள்
பிரித்தானியாவில், 270,000 இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் சும்மா இருப்பதாக பிரித்தானிய பணி மற்றும் ஓய்வூதியச் செயலர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தலைமுறை
கோவிட் தலைமுறையினருக்கு ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறியுள்ள பிரித்தானிய பணி மற்றும் ஓய்வூதியச் செயலரான லிஸ் கெண்டல் (Liz Kendall), வழக்கமாக வேலைக்குச் செல்வதைக் கூட மன அழுத்தம் ஏற்படுத்தும் விடயமாக அவர்கள் பார்க்கிறார்கள் என்கிறார்.
பிரித்தானியாவில், 16 வயது முதல் 34 வயது வரையுள்ள சுமார் 270,000 பேர், நீண்ட கால உடல் நல பாதிப்பு மற்றும் மல நலன் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இப்படி வேலைக்குச் செல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் மட்டும் 60,000 அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பணி மற்றும் ஓய்வூதிய அலுவலம் தெரிவிக்கிறது.
இவர்களில், சும்மாவே வேலைக்குப் போகாமல் அரசின் நிதி உதவியைப் பெறுவோரும் இருக்கிறார்கள் என்று கூறும் லிஸ், அதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |