தினமும் காலையில் 2 டம்ளர் வெந்நீர் குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அருந்துவதை விட சுடு தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது.
வெந்நீர் குடித்தவுடன் நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது. மேலும், காலையில் 2 டம்ளர் சுடுதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். மேலும் வெந்நீர் அருந்துவது மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப்போடப்படும்.
உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வர நாளடைவில் ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்.
சாப்பிடுவதற்கு முன்பும், சப்பிட்டே பிறகும் 2 டம்ளர் வெந்நீர் பருகுவதால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.