பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு
பெங்களூருவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகள்
பெங்களூரு நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் இரண்டு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதே அறையில் அந்த குழந்தைகளின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொலை மற்றும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?
மாலை 4 மணிக்கு ஓட்டல் தூய்மைப் பணியாளர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது 10 வயது மற்றும் 5 வயது சகோதரிகள் இரண்டு பேர் படுக்கையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அத்துடன் சிறுமிகளின் தந்தையான 40 வ்யது எஸ்.ஜி இம்ரானும் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் விளக்கம்
இந்த குடும்பம் முந்தைய நாள் ஹோட்டல் அறையில் வந்து தங்கியுள்ளனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இம்ரானின் இத்தகைய செயலுக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய குழந்தைகள் இப்படியொரு தாயுடன் வாழ்வதை தான் விரும்பவில்லை, எனவே தான் அவர்களையும் கொலை செய்ய முடிவு செய்தேன் என்று காவல்துறையினரிடம் இம்ரான் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |