பெங்களூருவில் ரூ.90000 மதிப்புள்ள சேலையை திருடிய பெண்: வீதியில் இழுத்து அடித்த உரிமையாளர்
பெங்களூருவில் கடையில் சேலையை திருடிய பெண்ணை உரிமையாளர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரூ.90,000 மதிப்புள்ள சேலையை திருடிய பெண்
பெங்களூருவின் அவென்யூ சாலையில் அமைந்துள்ள ஜவுளி கடை ஒன்றில் ஹும்பம்மா என்று அடையாளம் காணப்பட்ட பெண் ரூ.90,000 மதிப்புள்ள சேலையை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகளில் சம்பந்தப்பட்ட பெண் சேலையை திருடிச் சென்றது தெளிவாக பதிவாகியிருந்த நிலையில், அதே கடைக்கு மீண்டும் ஒருமுறை சில பொருட்களை திருட அந்த பெண் வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த முறை கடை உரிமையாளர் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்துள்ளார்.
அத்துடன் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கடை உரிமையாளர் உதவியாளருடன் சேர்ந்து வீதிக்கு இழுத்து திரும்ப திரும்ப அறைந்து காலால் உதைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.
இறுதியில் காவல்துறை வரவழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
Bengaluru
— Rahul Chauhan (@journorahull) September 26, 2025
A woman accused of theft was brutally assaulted on Avenue Road by Maya Silk Sarees owner Babulal & staff- dragged, beaten, even kicked in private parts.
Police jailed her for theft, but no action on shop owner.
Outrage grows, activists demand Babulal’s arrest. pic.twitter.com/IZcGjxRwZP
இருவர் மீதும் வழக்குப்பதிவு
கடை உரிமையாளர் பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், கடை உரிமையாளர் மீதும் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |