மேம்பாலத்திலிருந்து பறந்து விழுந்த பெண்! கொடூரமான சாலை விபத்தில் உரியிழந்த தமிழக தம்பதி.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ
பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழக தம்பதியினர் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களுருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்துள்ளது.
தமிழகம், ஓசூரைச் சேர்ந்த தம்பதியினர், செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில், எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் உள்ள லே-பை பகுதியில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுகொண்டு இருந்தனர்.
அப்போது, படுவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ஒன்று அவர்கள் மீது தாறுமாறாக மோதியது. கணவன் மனைவி இருவரும் சுமார் 40 அடி உயர மேம்பாலத்திலிருந்து பறந்து கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களில் பதிவானது. அந்த பயங்கரமான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய 20 வயதுக்கு உட்பட்ட இளைஞருக்கும்பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் டிஸ்சர்ஜ் செய்யப்பட்டவுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என பெங்களூரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.