4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது
கோவாவில் 4 வயது மகனை கொலை பெண் சிஇஓ அதிகாரி சுசனா சேத் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து பொலிஸார் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி
கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ கோவாவில் உள்ள ஹோட்டல் அறையில் தன்னுடைய 4 வயது மகனை கொன்று சூட்கேஸில் எடுத்துச் சென்ற போது பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், உயிரிழந்த குழந்தை தலையணையிலோ அல்லது துணியிலோ அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் சுசனா சேத் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து 2 காலியான இருமல் பாட்டில்களை கண்டுபிடித்து இருந்தனர்.
ஹோட்டல் அறையில் கிடைத்த கடிதம்
இந்நிலையில் சுசனா சேத் வாடகைக்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்து இருப்பதாக கோவா பொலிஸார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதில், "என் கணவர் தன்னுடைய மகனை சந்திக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என குறிப்பிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்த கடிதத்தை பொலிஸார் சீல் செய்து நிபுணர்கள் பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுசனா சேத் தன்னுடைய கணவனை பெங்களூருவில் 2010ம் ஆண்டு சந்தித்த பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சில ஆண்டுகளில் நீதிமன்ற விவாகரத்திற்கும் சென்றுள்ளனர்.
சுசனா சேத் 2022ம் ஆண்டு கணவர் மீது குடும்ப வன்முறை தொடர்பான புகார் வழங்கியுள்ளார். விவாகரத்து வழக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தந்தை தன்னுடைய குழந்தையை பார்க்கலாம் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சுசனா சேத்-தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை விசாரணை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து விசாரணையின் போது கணவன் வெங்கட்ராமன் 9 லட்சம் சம்பாதிப்பதை சுட்டிக்காட்டி குழந்தை பராமரிப்பிற்காக மாதம் 2.5 லட்சம் ரூபாய் வேண்டும் என சுசனா சேத் கோரிக்கை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Suchana Seth, murder case, Goa murder case, CEO of a Bengaluru tech startup, Goa hotel, cough syrup bottles, Goa Police, Crime,