சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மருத்துவர் கைது
இந்தியாவின் பெங்களூருவில், சிகிச்சைக்காக தன்னிடம் வந்த இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்
பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், தோல் பிரச்சினைகளுக்காக, சனிக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி மாலை, 7.30 மணியளவில், Dr பிரவீன் (56) என்னும் மருத்துவரின் கிளினிக்குக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த மருத்துவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் பொலிசில் புகாரளித்துள்ளார்.
தன் அனுமதியின்றி அந்த மருத்துவர் பல முறை தன்னைக் கட்டி அணைத்ததாகவும், முத்தமிட்டதாகவும் தோல் சிகிச்சைக்கான பரிசோதனை என்ற பெயரில் தன்னை தவறாக தொட்டதாகவும் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
பரிசோதனையின் ஒரு பகுதியாக வற்புறுத்தி அவரை ஆடைகளை அகற்றச் செய்ததாகவும், எல்லாவற்றிற்கும் மேல், நாம் தனியாக ஹொட்டல் அறை ஒன்றில் நேரம் செலவிடவேண்டும் என கூறியதாகவும் அந்த இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளிக்கு 70 கி.மீ தூரம் நடந்து சென்ற டீ விற்பவரின் மகன்.., பயிற்சி இல்லாமல் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி
தான் வழக்கமாக தன் தந்தையுடன்தான் கிளினிக்குக்கு வருவதுண்டு என்றும், இம்முறை அவர் பிஸியாக இருந்ததால் தனியாக கிளினிக்குக்கு சென்றதாகவும், அதைப் பயன்படுத்திக்கொண்ட மருத்துவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளர் அந்தப் பெண்.
அந்த இளம்பெண்ணின் புகாரைத் தொடர்ந்து Dr பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் முதலான பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |