கல்வி கற்க சென்ற இடத்தில்... பல கோடிகள் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கி சாதித்த பிரெஞ்சுக்காரர்
இந்தியாவின் பெங்களூருவில் பல்கலைக்கழக படிப்பிற்காக சென்ற பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், இன்று பல கோடிகள் மதிப்பிலான நிறுவனம் ஒன்றை உருவாக்கி சாதித்துள்ளார்.
பிரெஞ்சு மாணவர் ஒருவர்
பிரான்ஸ் நாட்டவரான Nicolas Grossemy நிறுவிய Paris Panini என்ற சுவையான சாண்ட்விச் கடைகள் தற்போது இந்தியாவின் உணவுப் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆதரவைக் குவித்து வருகிறது.
மிக சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்று, பிரெஞ்சு வணிக மாணவர் ஒருவர் வளர்ந்து வரும் உணவுத் தொழில்முனைவோராக மாறியது எப்படி என்ற அவரது எழுச்சியூட்டும் பயணத்தை வெளியிட்டிருந்தது.
பிரான்சில் மிக சாதாரணமான ஆசிரியர்கள் குடும்பத்தில் பிறந்த நிக்கோலஸ் க்ரோஸ்மி, தமது தாயாருக்கு சமையலறையில் சின்னச் சின்ன உதவிகள் செய்வதில் இருந்தே, சமையலில் தமக்கிருக்கும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அடையாளம் கண்டுள்ளார்.
இதுவே அவரை உணவு தொடர்பான நிறுவனம் ஒன்றை நிறுவ காரணமாக அமைந்துள்ளது. தமது 22வது வயதில் முதுகலை பட்டம் பெறும் பொருட்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார் நிக்கோலஸ்.
தமக்கு சிறு வயதில் அறிமுகமான சுவையான சாண்ட்விச் உணவை இந்திய உணவுப் பிரியர்களுக்கும் அறிமுகம் செய்ய முடிவு செய்தார். இதுவே Paris Panini என்ற சாண்ட்விச் கடைகள் உருவான கதை.
செலவு கட்டமைப்பு
வாடிக்கையாளர்களுக்கு நாம் என்ன வழங்கவிருக்கிறோம் என்பதை நமது கடையின் பெயராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிக்கோலஸ், அதுவே வாடிக்கையாளர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும் என்றார்.
ஒரு உணவு விற்பனை நிலையத்தை நடத்துவதற்கான செலவு கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் நிக்கோலஸ் விளக்கியுள்ளார். உணவுப் பொருட்களுக்கான செலவுகள் சுமார் 28 சதவிகிதம், வாடகை 10 சதவிகிதம், ஊழியர்களுக்கு 15 சதவிகிதம், நிர்வாக செலவுகள் 10 சதவிகிதம் மற்றும் சந்தைப்படுத்தல் 5முதல் 10 சதவிகிதம்.
இதுவே வெற்றிகரமான உணவுத் தொழிலை முன்னெடுக்க அடிப்படை என நிக்கோலஸ் குறிப்பிடுகிறார். இதன் மூலம் சுமார் 15 சதவிகிதம் லாபம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். தற்போது Paris Panini நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 50 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |