பெங்களூரு பொறியாளர்கள் உருவாக்கிய புதிய மின்சார Trike
பெங்களூரூவைச் சேர்ந்த 2 பொறியாளர்கள் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக மூன்று சக்கர மின்சார Trike-ஐ ‘Anti-Topple Technology’ உடன் உருவாக்கியுள்ளனர்.
இந்த வாகனம், iGowise Electric Trike என அழைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஸ்ரவண் குமார் அப்பனா (Technologist turned Entrepreneur) மற்றும் சுரேஷ் பாபு சல்லா (Civil Engineer & Railway Technologist).
2020-ஆம் ஆண்டு நிறுவனம் தொடங்கப்பட்டு, கொரோனா காலத்தில் இந்த Trike-ஐ உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பொறியாளர்கள் தெரிவித்ததாவது, “நாங்கள் delivery riders, பெண்கள், பெரியர்வர்கள், சிறு தொழில்முனைவோர் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் தினசரி இரண்டு சக்கர வாகனங்களில் சந்திக்கும் சிரமங்களை புரிந்துகொண்டோம். அதன்பின், மனிதர்களின் தேவையை மையமாகக் கொண்டு இந்த வாகனத்தை வடிவமைத்தோம்” என கூறினர்.
இந்த Trike, இரண்டு பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது:
- கீழ் பகுதி – இரட்டை பின்சக்கரங்களை தாங்கும்.
- மேல் பகுதி – சாயும் (tilting) அமைப்புடன் இருக்கும்.
இந்த வாகனம், மேடு-பள்ளங்கள் நிறைந்த சாலை வழியாக சென்றாலும் வாகனம் சமநிலையை இழக்காமல் பாதுகாப்பாக இயங்கும்.
பயணிகள் சிக்னலில் நிற்கும்போது கால்களை தரையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும், குறிப்பாக பெண்கள் மற்றும் மூத்தோருக்கு மிகுந்த வசதியாக இருக்கும்.
இந்த கண்டுபிடிப்பு, இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் புதிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |