பெங்களூருவில் பெய்த கனமழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி
பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பெங்களூருவில் கனமழை
பெங்களூருவில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் மழைக்காக சுற்றுச்சுவர் அருகில் ஒதுங்கி நின்ற பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், அதில் 3 பேர் குழந்தைகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிதியுதவி அறிவிப்பு
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |