இந்தியாவின் பெரிய தொழிலதிபர்! ரூ.350 கோடியில் வீடு- யார் இவர்?
பெங்களூர் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் விப்ரோ குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான அசிம் பிரேம்ஜி, கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் 350 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய விலையுயர்ந்த வீட்டை வைத்திருப்பதாக தெரிகிறது.
விலையுயர்ந்த வீடு
பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அசிம் பிரேம்ஜியின் ஆடம்பரமான பண்ணை வீடு 6000 சதுர அடியில் சுமார் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆடம்பரமான வீட்டில் தான் அசிம் பிரேம்ஜி வசித்து வருவதாக தெரிகிறது.
மேலும் இது பழமையான பாரம்பிய முறையில் கட்டப்பட்ட வீடாகும். விப்ரோ தலைவரின் ஆடம்பரமான வீட்டின், உட்புறத்தில் பாரம்பரிய மற்றும் நவீன கட்டிடக்கலை கலவையுடன், வெளிப்புறமாக வெளிப்படும் செங்கல் சுவர் மற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜியின் வீடு முழுவதும் அழகிய பூங்கா மற்றும் தோட்டம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த வீட்டில் ஹோம் தியேட்டரும் பல்வேறு நவீன வசதிகள் அனைத்தும் நிறைந்து உள்ளது.
விப்ரோ நிர்வாகத்தை ரிஷாத் ப்ரேம்ஜி கையில் எடுத்தப் பின்பு அசிம் பிரேம்ஜி ஓய்வு எடுத்து வருகிறார். இவருடைய ஓய்வு காலத்திற்கு ஏற்ற வகையில் அவருடைய பெங்களூர் வீடு பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழமையும், புதுமையும் இணைந்த இந்த வீட்டின் மதிப்பு ரூ.350 கோடியாக இருப்பது மட்டும் அல்லாமல் பெங்களூரின் காஸ்ட்லியான வீடுகளில் ஒன்றாக உள்ளது.
மொத்த சொத்து மதிப்பு
ஆசிம் பிரேம்ஜி தனது 21 வயதில் தந்தையின் மரணத்திற்குப் பிறகு விப்ரோவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விப்ரோ-வின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அசிம் பிரேம்ஜி தான் முக்கியமான காரணம்.சமையல் எண்ணெய் தயாரிப்பில் துவங்கிய விப்போ சாம்ராஜ்ஜியம் தற்போது தொழில்நுட்ப துறையில் அசத்தி வருகிறது.
இந்தியாவின் முக்கிய தொழிலதிபராகவும், பெரும் நன்கொடையாளராகவும் இருக்கும் அசிம் பிரேம்ஜி-யின் மொத்த நிகர சொத்து மதிப்பு 11.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது இந்திய மதிப்பில் ரூ. 95,000 கோடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |