ரூ.15,800 தண்ணீர் கட்டணம்: பெங்களூருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் புலம்பல்: வைரல் புகைப்படம்
பெங்களூருவில் வாடகை வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் பகிர்ந்த தண்ணீர் கட்டண ரசீது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
ரூ.15,800 தண்ணீர் கட்டணம்
பெங்களூருவில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் ரெட்டிட் பக்கத்தில் தனது வீட்டு உரிமையாளர் அளவுக்கு அதிகமான தண்ணீர் கட்டணத்தை வசூலிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
My landlord slams me with exorbitant BWSSB water charges every month.
byu/ananttodani inbangalore
கட்டணத்தின் ரசீதில் 1,65,000 லிட்டர் தண்ணீருக்கு சுமார் ரூ.15,800 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வாடகை வீட்டில் 2 பேர் மட்டுமே வசிப்பதாகவும், பெரும்பாலான நேரங்களில் இருவரும் அலுவலகங்களில் நேரத்தை செலவிடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாதந்தோறும் தங்களுக்கு ரூபாய் 10,000 தண்ணீர் கட்டணம் வருவதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளரின் பதில்
இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் பேசிய போது, அவர் தெளிவான பதில் எதையும் வழங்கவில்லை.
அளவுக்கு அதிகமான கட்டணம் செலுத்திய பிறகும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தண்ணீர் வருவது இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |