கிளியை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு நகரில் செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்று இளைஞர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞர்
சுமார் ரூ.2.5 மதிப்புள்ள செல்லப்பிராணியான மக்காவ்(Macaw) வகை கிளியை காப்பாற்ற முயன்று பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபர் அருண் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செல்லப்பிராணி மக்காவ் வெள்ளிக்கிழமை குமாரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்று அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது அமர்ந்துள்ளது.
உடனடியாக அதை மீட்க வேண்டும் என்று உரிமையாளர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
அப்போது எஃகு குழாய் ஒன்றை(steel pipe) எடுத்துக் கொண்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எஃகு குழாய் ஆனது மின்னழுத்த கம்பியில் பட்டுள்ளது.

அப்போது உயர் மின்சாரம் தாக்கி 32 வயது தொழிலதிபர் அருண் குமார் உயிரிழந்தார் என மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |