Apple Benefits: தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
An apple a day keeps the doctor away என்பதை பலரும் சொல்லக் கேட்டிருப்போம்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
எமது அன்றாட வாழ்வில் தினமும் ஒரு ஆப்பிள் உட்கொள்வதனால் நீரிழிவு மற்றும் எலும்புகள் வலுவடைதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
அத்துடன் உடல் எடையை குறைப்பதற்கும், கல்லீரல்
பாதுகாப்பு, முடி வளர்தல், புற்றுநோய் அறிகுறியிலிருந்து விடுபடுவதற்கான பல வழிமுறைகளை ஆப்பிள் எமக்கு அளிக்கின்றது.
ஆப்பிளினை எடுத்து கொள்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
எந்த வகையான பழத்தை உட்கொண்டாலும் உடனடியாக ஜலதோசம் ஏற்படும் நபர்கள் கூட ஆப்பிளினை எடுத்துக்கொண்டால் எதுவும் ஆகாதாம்.
மேலும் சிறுகுழந்தைகளுக்கு ஆரம்பகட்ட உணவாக வேகவைத்த ஆப்பிளை கொடுக்கலாம்.
இவ்வாறான நற்குணங்களை கொண்டுள்ள ஆப்பிள் பழமானது, இந்தியா , பிலிப்பைன்ஸ் , பாகிஸ்தான் என உலகில் மூன்று இடங்களில் தான் அதிகம் விளைகின்றது.
அதுவும் இந்தியாவில் விளைகின்ற ஆப்பிள் பழம் தான் மிகவும் உயர்தரமாக கருதப்படுகின்றது.
ஆப்பிள் பழத்தினை வாங்கும் வாடிக்கையாளர்கள் கருத்திற் கெள்ள வேண்டிய முதல் விடயம் ஆப்பிளினை வாங்கிய நாளிலே உட்கொள்ளல் வேண்டும்.
ஏனெனில் குறித்த ஆப்பிள் பழமானது விவசாயிகளிடமிருந்து விற்பனை சந்தைக்கு வருவதற்கு ஒருவார கால தாமதாகும்.
அத்துடன் அதனை வாங்கிய பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் அதிலிருந்து நார்சத்துக்கள் கிடைக்கப்பெறாமல் போகின்றது.
அதேவேளை அதிகப்படியான வேலை செய்பவர்கள், கணனியில் எந்நேரமும் அமர்ந்து வேலை செய்பவர்கள், வீட்டுத்தலைவிகள் தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக்கொள்வது நல்லது.
மிக முக்கியமாக வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலை சீரான நிலையில் வைத்துக்கொண்டு சிறந்த பலனையும் அடைய முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |