தினம் ஒரு சிட்டிகை பெருங்காயம் சாப்பிடுங்க...இந்த நோய் எல்லாம் பறந்து ஓடிவிடுமாம்
Health Tips
asafoetida
good for thsess diseases
By Balakumar
பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம்.
பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூ ட்டும் சுவையை அளிக்கிறது. இத னை பெரும்பாலும் பருப்பு வகைக ள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படும்.
இதில் பல ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்துள்ளது. பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.
அந்தவகையில் இதனை சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- செரிமான பிரச்சனைகளில் உடனடி நிவாரணம் கிடைக்க சிறிது பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தால் சரியாகும். பெருங்காயம் வயிற்றில் உள்ள என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி அமிலத்தன்மையை குறைப்பதால் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகிறது.
- பெருங்காயத்தை இஞ்சி மற்றும் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்து வந்தால் வறட்டு இருமல், மார்புச்சளி போன்றவை குணமாகும்.மேலும் இது ஒரு சுவாச தூண்டுதலாக செயல்படுகிறது. நெஞ்சு எரிச்சல், இருமல் மற்றும் கபம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் சிறிது பெருங்காயத்தை தண்ணீர் கலந்து அரைத்து மார்பில் தேய்த்து வர குணமாகும்.
- ஒரு கப் மோரில் வெந்தயத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் மாதவிடாயால் ஏற்படும் வயிற்றுவலி குறைய வாய்ப்பு உண்டு.
- குறிப்பிட்ட நாளில் மாதவிடாய் ஏற்படாமல் தவிக்கும் பெண்கள் வாலேந்திர போளம், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை அரைத்து சிறிய உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் ஒழுங்கான நாளில் மாதவிடாய் ஏற்படும். மேலும் சினைப்பை நீர்கட்டி பாதிப்பால் அவதிப்படும் பெண்களுக்கும் இது சிறந்த தீர்வு தருகிறது.
- குழந்தை பிறந்த பிறகு கர்ப்பப்பையிலிருந்து லோசியோ எனப்படும் ஒருவகை திரவம் வெளிப்படும். இதனை முழுவதுமாக வெளியேற்ற பனை வெல்லம், வெள்ளைப் பூண்டுடன் பொரித்த பெருங்காயத்தை சேர்த்து பிரசவித்த முதல் 5 நாட்களுக்குக் கொடுத்து வரலாம். ஆனால் கர்ப்பிணிகள் பெருங்காயத்தை அதிகம் சேர்க்கக் கூடாது.
- சுற்றுச்சூழல் மற்றும் சந்தைகளில் விற்கப்படும் கலப்படம் கலந்த பொருட்களால் சருமமானது வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை போக்க வீக்கம் அல்லது காய்ந்து போன தோல் ஆகியவற்றை சரிசெய்ய பெருங்காயத்தை நேரடியாக தோள்மீது தடவ வேண்டும்.
- பெருங்காயம் ஒரு மன அழுத்தத்தை சீராக்கி. தற்குக் காரணம் மன அழுத்தத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகித்து அதனை சார்ந்த பல உடல் நல பாதிப்புகளான கருவுறாமை, தூக்கமின்மை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது என்பதே ஆகும்.அதேபோல் பெருங்காயத்தில் உள்ள பெருளிக் அமிலம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டது.
- ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவை அதிகரிப்பதால் பதற்றம் உடல் நடுக்கம் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஆகியவை தடுக்கப்படும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இவர்கள் பாகற்காயில் பெருங்காயத்தை கலந்து சாப்பிடலாம்.
- நன்கு வெண்ணெயில் வறுக்கப்பட்ட பெருங்காய பொடியை தேனுடன் கலந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைவு தொடர்பான பிரச்சனைகள் தீரும். மேலும் பெருங்காயம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளை நீக்கவும் செய்யும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் பெருங்காயத்தை கலந்து பருகினால் தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை நீங்கும்.
- பல்வலி குணமாக பெருங்காயத்தை எலுமிச்சை சாற்றுடன் கலந்து பேஸ்ட் போல தயார் செய்து வலி இருக்கும் இடத்தில் தடவினால் போதும். இதன் வாசனைப் பொருள் நரம்பு உத்தியாக செயல்பட்டு நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது.
-
பெருங்காயம் புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய காரணியான கார்சினோஜென்களின் பயன்பாட்டினை குறைப்பதால் புற்றுநோய் ஏற்படுவது குறைகிறது. மேலும் மார்பகம், நுரையீரல், குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது 50 சதவிகிதத்திற்கும் மேல் தடுப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US