வேர்க்கடலை சாப்பிடுவதனால்.. உடலில் ஏற்படும் ஏராளமான மாற்றங்கள்!
வேர்க்கடலையில் இயற்கையாகவே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.அவற்றை தினமும் உண்பதால் உடலில் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றன.
தினமும் வேர்க்கடலையை அதிகளவு உணவில் சேர்த்துக்கொண்டால் சில விரும்பத்தகாத மாற்றங்களை உண்டாக்கும் என்கின்றார்கள்.ஆனால் தினமும் அளவோடு சாப்பிட்டால் எந்தவித பிரச்னையையும் ஏற்படுத்தாது.
தினசரி உணவில் வேர்க்கடலையை அளவோடு சாப்பிட்டு வந்தால் உடலில் ஏகப்பட்ட நன்மைகள் வந்தடைகின்றன.
வேர்க்கடலையில் அதிகளவு புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்களான வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை வேர்க்கடையில் உள்ளன.
மேலும் தாதுக்களான மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
வேர்க்கடலை உண்பதால் உண்டாகும் நன்மை!
வேர்க்கடலையில் இதய ஆரோக்கிய கொழுப்புகளான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன.அவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து, உணவு உண்பதில் திருப்தி உணர்வை அளிக்கிறது, இதன்மூலம் நீங்கள் நீண்ட நேரம் நிறைவாக உணரலாம்.
உங்கள் உணவில் வேர்க்கடலை சேர்த்துக்கொள்வது, ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எடையை குறைக்க உதவும்.
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் விரைவாக அதிகரிப்பதைத் தடுக்கிறது.
இது நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வேர்க்கடலை உள்ள புரதமானது, ஜிம் செல்பவர்களுக்கு வலுவான தசையை சிறப்பாக உருவாக்க உதவும். வேர்க்கடலை தசை வளர்ச்சி மற்றும் தசைப்பிடிப்புகள் விரைவில் குணமடைவதை ஊக்குவிக்கிறது.
வேர்க்கடலையின் ஊட்டச்சத்து உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சிறப்பாக கட்டுப்படுத்தும் திறனுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |