Daily ஒரு புதினா டீ குடித்து பாருங்க!
Peppermint Leaves
Healthy Food Recipes
Milk
Honey
By Kirthiga
பொதுவாகவே புதினாவை மருத்துவ மூலிகை என்று தான் கூறுவார்கள். இந்த இலையில் காணப்படும் மருத்துவ குணங்கள் ஏராளம். இது நமது உடலிற்குள் சென்றால் பல நன்மைகள் ஏற்படும்.
இவ்வாறு புதினாவில் என்ன நன்மைகள் இருகின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
- ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
- உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
- கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் குணமாகும்.
புதினா தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
-
வயிற்றுப் புழுக்களை அழிக்கும்.
வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
-
சமையலுக்கு சேர்த்தால் மணமணக்கும்.
-
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
பல நன்மைகளை கொண்ட புதினாவை தினமும் டீ போட்டு குடித்தால் நல்லது. மிகவும் சுவையாகவும் புத்துணரச்சியுடனும் இருக்க செய்யும்.
ஆகவே வீட்டிலேயே எப்படி சுவையான புதினா டீ செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
5 புதினா இலை
-
1 டீஸ்பூன் தேயிலை
-
1 ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு
- ¼ டம்ளர் பால்
செய்முறை
-
முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலை, தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
- பாதியாக சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனகற்கண்டு சேர்த்து பருகவும்.
- விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.
-
பனங்கற்கண்டு சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது.
- தேன் அல்லது பனங்கற்கண்டு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.
இது குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்
-
மன அழுத்தம் குறையும்.
-
செரிமான பிரச்சினை நீங்கும்.
-
உடல் எடை குறையும்.
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
-
வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
-
காயத்தை குணப்படுத்தும்.
- முகத்தின் அழகை மேம்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US