தன் மனைவியைப் போலவே இருந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பிரித்தானியர்: காரணத்தை நிராகரித்த நீதிபதி
அழகிய இளம்பெண் ஒருவர் தன் மனைவியைப்போலவே இருந்ததால் ஆத்திரமடைந்த ஒருவர், அதனால்தான் தான் அந்தப் பெண்ணை கொடூரமாக கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இளம்பெண் ஒருவர் தன் மனைவியைப்போலவே இருந்ததால் ஆத்திரத்தில் கொலை
ஸ்கொட்லாந்தில் வாழும் ஆண்ட்ரூ (Andrew Innes, 52) தான் இணையத்தில் சந்தித்த, பிலிப்பைன்ஸ் நாட்டவரும், தற்போது பிரிஸ்டலில் வாழ்ந்துவருபவருமான பென்னிலின் (Bennylyn Burke, 25) என்ற இளம்பெண்ணையும் அவரது மகளான ஜெலிகா (Jellica, 2)ஐயும் கொலை செய்து தன் சமையலறையில் புதைத்தார்.
பென்னிலின் பார்ப்பதற்கு தன் மனைவியைப்போலவே இருந்ததாகவும், அவரது உடல் அச்சு அசலாக தனது முன்னாள் காதலி ஒருவருடைய உடலைப் போலவே இருந்ததாகவும் கூறிய ஆண்ட்ரூ, அவரைப் பார்க்கும்போது, தன்னை விட்டுப் பிரிந்து ஜப்பானில் வாழும் தன் முன்னாள் மனைவி செய்த மோசமான செயல்களும், தனது முன்னாள் காதலி ஒருவர் தன்னை பயங்கரமான நிலையில் விட்டுவிட்டு போனதும் நினைவுக்கு வந்ததாகவும், அதனால் அளவுக்கு மீறிய ஆத்திரம் ஏற்படவே, தான் பென்னிலினைக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வேறொரு சிறுமியையும் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்த ஆண்ட்ரூ, அந்தச் சிறுமியை தன் வீட்டில் கட்டிப்போட்டு, அவளையுயும், குழந்தை ஜெலிகாவையும் வன்புணர்ந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை செய்ததற்கான காரணத்தை நிராகரித்த நீதிபதி
தான் ஸ்டீராய்டு மருத்துகள் எடுத்துக்கொள்வதாக கூறியுள்ள ஆண்ட்ரூ, அந்த மருந்துகளின் பக்க விளைவு தனக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் தான் கொலை செய்ததாகவும் கூறினார்.
ஆனால், அந்தக் கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, ஆண்ட்ரூவின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி Lord Beckett, நேற்று ஆண்ட்ரூவுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
ஆண்ட்ரூ, குறைந்தபட்சம் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Andrew Innes in Dundee

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.