எய்ட்ஸை முறியடித்த இளைஞர்! காதல் தோல்வியில் தற்கொலை
போராட்டத்திற்கு நடுவே வாழும் பலரை நாம் பார்த்து பேசி பழகியதுண்டு. ஆனால் போராட்டமே தனது வாழ்க்கையாய் கொண்ட பென்சன் எய்ட்ஸ் போன்ற நோயையே தோற்கடித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.
தனது சிறுவயது முதலே நோய், புறகணிப்பு என சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட குழந்தையாக இருந்து தன் இளம் வயது வரை வளர்ந்த பென்சன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்.
தாய் தந்தை என இருவருக்குமே எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நிலையில் தாயிடமிருந்து பென்சனுக்கும் அவரின் சகோதரியான பென்சிக்கும் எய்ட்ஸ் நோய் தொற்றியது. இதனால் சிறுவயது முதலே நோயோடு மட்டும் போராடாமல் சமூகத்தின் நிராகரிப்பில் இருந்தும் போராடி வருகிறார்.
சிறுவயதில் இந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவில்லை. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் புறகணிக்கக் கூடாது என அரசு உத்தரவு இருந்து பள்ளி நிர்வாகம் இவர்களை ஏற்றுக்கொள்ள தயங்கியது. அப்படி பள்ளி படிப்புக்கே மிகவும் சிரமப்பட்ட இந்த குழந்தைகளை அப்போதைய மத்திய அமைச்சர் சுஷ்மா சுராஜ் அழைத்து அள்ளி அணைத்துக்கொண்டார். இதன்பின்பு இவர்களின் போராட்டங்கள் குறைந்ததே தவிர மறையவில்லை.
பின்னர் தாய் தந்தை இறந்த பிறகு பாட்டியின் அரவணைப்பில் பென்சனும் பென்சியும் வளர்ந்து வந்தனர். பின்னர் 2010 ஆம் ஆண்டு பென்சனின் சகோதரி பென்சி அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிறிது காலத்தில் அரவணைப்பாக இருந்த பாட்டியும் இறந்தார்.
இவ்வாறு தாய் தந்தை உடன்பிறந்த சகோதரி அரவணைப்பு தந்த பாட்டி தாத்தா என உறவுகளை பறிக்கொடுத்த பென்சன் எய்ட்ஸ் நோயையும் வீழ்த்தி 26 வயது வரை நம்பிக்கையை மட்டுமே தனக்கு ஆயுதமாக கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த நம்பிக்கை காதலால் மறைந்தது என்பதே இப்போதைய சோகம்.
காதலில் ஏற்பட்ட சின்ன பிரச்சனையில் காதலி இவரை விட்டு சென்றார். சிறுவயதிலிருந்து நிராகரிப்பை மட்டுமே ஏற்று வந்த பென்சனுக்கு இந்த காதல் ஒரு பெரும் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் காதலி சென்றதும் மனமுடைந்தார். ஏனென்றால் அவரை விட்டு பிரிந்து சென்றது காதலி மட்டுமல்ல வாழ்க்கையின் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கையும்தான் போல.
இதனால் தன் வீட்டில் மனமுடைந்து தன் வாழ்க்கையையே முடிக்கொண்டார். பென்சன். இதைப்பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில் ப்ரேக்- அப் ஆன பிறகு சரியான மன நிலையில் இல்லை .அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறினர்.
கொல்லத்தில் முதலாவதாக எய்ட்ஸ் இருக்கும் குடும்பம் என கண்டறியப்பட்ட இந்த குடும்பத்தில் கொரோனாவையும் தாண்டி உயிர்வாழ்ந்த ஒரே ஒருவர் பென்சன் மட்டுமே. இப்போது அவரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.