அடுத்த குறி புலம்பெயர்தல் சட்டத்தரணிகளுக்கு... பிரித்தானிய உள்துறைச் செயலர் உறுதி
சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவும் சட்டத்தரணிகள், நீதியின் முன் கொண்டுவரப்படுவது உறுதி என்று கூறியுள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலர்.
சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவும் சட்டத்தரணிகள்
சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்புவதற்காக, எப்படி பொய் சொல்வது என சில சட்டத்தரணிகள் கற்றுக்கொடுப்பது குறித்த ஆதாரங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
புலம்பெயர்ந்தோர் போன்று தன்னைக் காட்டிக்கொண்டு, சட்டத்தரணி ஒருவரை சந்தித்த பிரபல பிரித்தானிய ஊடகவியளாளர் ஒருவருக்கு, எப்படி பொய் சொல்வது என கற்றுக்கொடுத்தார் சட்டத்தரணி ஒருவர். இப்படி பொய் சொல்லக் கற்றுக்கொடுப்பதற்காக இத்தகைய சட்டத்தரணிகள் 10,000 பவுண்டுகள் வரை பெறும் விடயமும் அந்த ஊடகவியலாளரால் வெளிச்சத்துக்கு வந்தது.
Credit: Alamy
பிரித்தானிய உள்துறைச் செயலர் உறுதி
இந்நிலையில், சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவும் சட்டத்தரணிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளுக்காக இன்று ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து பேசிய பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், சிலர் சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்திக்கொள்வதற்கு உதவுவதற்காக பொய் சொல்கிறார்கள்.
The Times
பிரித்தானிய மக்களோ, சட்ட விரோத புலம்பெயர்தலை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே, இந்த தவறான சட்டத்தரணிகளை ஒடுக்க தீர்மானித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இப்படி சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவும் சட்டத்தரணிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |