சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பென்னி தயாளன் முடிவுக்கு... மனைவி என்ன சொல்லியுள்ளார் பாருங்க!
பிரபல பாடகர் பென்னி தயாள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்த முடிவுக்கு அவரது மனைவியும் ஆதரவு அளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்பொழுது 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஷோவை மகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் ஸ்ரீதர் சேனா வெளியேற்றப்பட்டார்.
இவர் கண்டிப்பாக டைட்டில் பட்டம் வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள், நிகழ்ச்சியின் நடுவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடுவர்களுள் ஒருவரான பென்னி தயாள் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்தார். பலர் அவரது சமூக வலைத்தள பக்கங்களுக்கு சென்று தொல்லை கொடுத்ததால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது மனைவி கேத்தரின் தங்கம் கணவர் எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சூப்பர் சிங்கர் போன்ற பெரிய வாய்ப்பை எதை பற்றியும் யோசிக்காமல் உடனடியாக உதறி தள்ளியதை நினைக்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.