கோல் மழை பொழிந்த ரியல் மாட்ரிட்! சுக்குநூறாக நொறுங்கிய எதிரணி
லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் எல்செ அணியை வீழ்த்தியது.
பென்சிமா மிரட்டல்
சாண்டியாகோ பெர்னாபியு மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் மர்கோ அசென்சியோ கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கரிம் பென்சிமா 31வது நிமிடத்திலும், 45+1வது நிமிடத்திலும் கிடைத்த இரண்டு பெனால்டிகளை பயன்படுத்தி கோல்கள் அடித்தார்.
@GettyImages
இரண்டாம் பாதியில் 80வது நிமிடத்தில் லுகா மோட்ரிக் அசத்தலாக ஒரு கோல் அடித்தார். கடைசி வரை எல்செ அணியால் கோல் அடிக்க முடியாததால் ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
? @lukamodric10 ?#RealMadridElche pic.twitter.com/FSnFiXfGko
— Real Madrid C.F. (@realmadrid) February 15, 2023
இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், ஸ்பானிஷ் லீக்கில் அணியில் அதிக கோல்கள் (230) அடித்த வீரர் என்ற பெருமையை பென்சிமா பெற்றார்.
@EFE