ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு
ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் நேற்றிரவு மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்கள்
நேற்றிரவு 8.00 மணியளவில் பெர்லின் விமான நிலையத்தில் ஒரு ட்ரோன் காணப்பட்டதாக ஒருவர் கூறியதைத் தொடர்ந்து சில ஓடுபாதைகள் மூடப்பட்டன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ரோந்து சென்றுகொண்டிருந்த பொலிசார் சிலர் ஒரு ட்ரோனைப் பார்த்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஹெலிகொப்டர் உதவியுடன் அந்த ட்ரோனைத் தேடும் முயற்சியில் பொலிசாரும் ஃபெடரல் விமான அலுவலகமும் இறங்கின.
சில விமானங்களின் புறப்பாடு நிறுத்தப்பட்டது. லண்டனிலிருந்து பெர்லின் வந்த ஒரு விமானம் உட்பட சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
சமீபத்தில், டென்மார்க், நோர்வே மற்றும் போலந்திலுள்ள விமான நிலையங்களிலும், ஜேர்மனியின் மியூனிக் விமான நிலையத்திலும் மர்ம ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |