பெர்லின் விமான நிலையத்தில் தென்பட்ட மர்ம ட்ரோனால் பரபரப்பு
Berlin Airport briefly suspends flights over drone sighting: பெர்லின் விமான நிலையத்தில் மர்ம ட்ரோன் காணப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள விமான நிலையத்தில் மர்ம ட்ரோன் ஒன்று தென்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பெர்லின் விமான நிலையத்திலும் மர்ம ட்ரோன்
சமீப காலமாக, ஐரோப்பாவின் விமான நிலையங்கள் பலவற்றில் மர்ம ட்ரோன்கள் தென்படுவது அதிகரித்துவரும் நிலையில், ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் அதிக அளவில் ட்ரோன்கள் தென்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், பெர்லின் விமான நிலையத்தில் 28 முறை மர்ம ட்ரோன்கள் தென்பட்டுள்ளதாக ஜேர்மன் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 8.00 மணியளவில், பெர்லின் ப்ராண்டன்பெர்க் விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதையின் மேல், ட்ரோன் ஒன்று தென்பட்டுள்ளது.
உடனடியாக நிறுத்தப்பட்ட விமான சேவை, 45 நிமிடங்களுக்குப் பிறகே மீண்டும் துவங்கியுள்ளது. என்றாலும், பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இரவு 9.05 மணியளவில் மீண்டும் விமான சேவை துவங்கினாலும், பல விமானங்கள் தாமதமாகவே புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.