பெர்லின் விமான நிலையம் பயணிகளுக்காக வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
பெர்லின் விமான நிலையம், வேலைநிறுத்தம் தொடர்பில் பயணிகளுக்கு முக்கிய செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.
பெர்லின் விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்தி
நாளை புதன்கிழமை, அதாவது, மார்ச் மாதம் 18ஆம் திகதி, விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பெர்லினிலுள்ள Berlin-Brandenburg விமான நிலையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் பிரதான தொழிலாளர் யூனியனான Verdi, நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன் காரணமாகவே, நாளை விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக Berlin-Brandenburg விமான நிலையம் தெரிவித்துள்ளது.
‼️Due to a warning strike, no regular flights will be operating at BER on 18 March.
— BER – Berlin Brandenburg Airport (@berlinairport) March 16, 2026
Please contact your airline or tour operator for information on rebooking and alternative travel options.
சமூக ஊடகமான எக்ஸில் இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள Berlin-Brandenburg விமான நிலையம், நாளை பயணத்துக்காக திட்டமிட்டுள்ளவர்கள், தங்கள் விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு, மாற்றுத்திட்டம் குறித்து தகவல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |