ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு
Businesswoman charged with spying for Russia: ஜேர்மனியில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினை மையமாகக் கொண்ட தொழிலதிபராகிய பெண் ஒருவர் மீது ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் தொழிலதிபர்
ஜேர்மன் மற்றும் உக்ரைன் இரட்டைக் குடியுரிமை கொண்டவரான இலோனா (Ilona W, 57) என்னும் பெண், பெர்லினை மையமாகக் கொண்டு மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

ராணுவ மற்றும் அரசியல் வட்டாரத்தில் ஆலோசகராகவும் பணியாற்றுவதால், பெரும் புள்ளிகளின் தொடர்பு இருந்திருக்கிறது அவருக்கு.
இந்நிலையில், தனது அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை பயன்படுத்தி, தகவல்களை சேகரித்துள்ளார் இலோனா.
பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பிலிருந்த இலோனா, தான் சேகரித்த தகவல்களை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அந்த அதிகாரிக்கு உதவியும் உள்ளார்.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திலும், ஆயுத தயாரிப்புத் துறையிலும் பணியாற்றியவர்களை தனக்காக வேலை செய்யவைக்கவும் முயன்றுள்ளார் இலோனா.
மேலும், ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், அந்த ரஷ்ய அதிகாரிக்காக ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பில் தகவல்களைப் பெறவும் முயன்றுள்ளார் இலோனா.
இலோனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ரஷ்ய அதிகாரியை ஜேர்மனி வெளியேற்ற, பதிலுக்கு ஜேர்மன் தூதர் ஒருவரை ரஷ்யா வெளியேற்றியது.
இந்நிலையில், இலோனா மீது ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது தொடர்பில் முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.