ஜேர்மன் தலைநகரில் ஆட்சி மாற்றம்? இடதுசாரிகள் கூட்டணி பேச்சுவார்த்தை
Berlin leftists seek to pave way for coalition: பெர்லின் மாகாணத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இடதுசாரிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்கள்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
ஜேர்மன் தலைநகரில் ஆட்சி மாற்றம்
ஜேர்மன் தலைநகரான பெர்லின், ஒரு நகரம் மட்டுமல்ல, அது ஒரு மாகாணமும் ஆகும்.
பெர்லின் நகரின் மேயராக தற்போது Christian Democratic Union of Germany (CDU) கட்சியைச் சேர்ந்த, Kai Wegner என்பவர் பொறுப்பு வகித்துவருகிறார்.

ஆனால், சமீபத்தில் பெர்லினில் நடைபெற்ற தேர்தலில், ஆளும் CDU கட்சியை பின்னுக்குத் தள்ளி, Die Linke (The Left) என்னும் தீவிர இடதுசாரிக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், Die Linke கட்சியின் தலைவரான Elif Eralp என்பவர், இன்று, Greens மற்றும் Social Democrats (SPD) கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, பெர்லினில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கூட்டணி முடிவாகும் நிலையில், Die Linke கட்சியின் தலைவரான Elif Eralp, பெர்லின் நகர மேயராகும் வாய்ப்பு உள்ளது.
அப்படி Elif Eralp பெர்லின் நகர மேயராகும் பட்சத்தில், பெர்லின் நகரின் முதல் பெண் மேயர் என்னும் பெருமை அவருக்குக் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.