புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிடும் ஜேர்மனி
சில நாடுகள் புலம்பெயர்ந்தோரை எப்படி நாட்டை விட்டு வெளியேற்றலாம் என தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிட்டுவருகிறது ஜேர்மன் தலைநகரம்.
புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம்
இந்த திட்டத்தை முன்வைத்துள்ளவரே ஜேர்மனி பிரிந்திருந்த காலகட்டத்தில், வேலைக்காக ஜேர்மனிக்கு வந்த முதல் தலைமுறையினரின் மகள்தான். அவரது பெயர் Sevim Aydin. பெர்லின் செனேட்டில் உறுப்பினராக உள்ள Sevim Aydin, Social Democrat கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
Monika Skolimowska/dpa/picture alliance
ஜேர்மனியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறும் Sevim, புலம்பெயர்ந்தோர் எப்போதுமே எதிர்மறையாகத்தான் காட்டப்பட்டார்கள், அவர்களை நேர்மறையான விடயங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் என்கிறார்.
புலம்பெயர்ந்தோர் அனுபவித்த கஷ்டங்கள்
ஜேர்மனியில் நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்த்துவந்த புலம்பெயர்ந்தோர் பலர் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் இனவெறுப்பு முதலான பிரச்சினைகள் இருக்க, மறுபக்கமோ, அவர்களுடைய உழைப்பில் பாதியை அவர்களுடைய நாடே பிடுங்கிக்கொண்ட அவலமும் நடந்துள்ளது.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபின்பும் அவர்கள் நிலைமை மோசமாகியுள்ளதே தவிர முன்னேற்றம் ஏற்படவில்லை. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பலர் வேலையிழந்து தவிக்க, பலர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள், வேறு பலர் தாங்களாகவே தங்கள் நாடுகளுக்குத் திரும்பியுள்ளார்கள்.
Werner Schulze/IMAGO
ஆக, ஜேர்மனியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட புலம்பெயர்ந்தோரை நினைவுகூரும்வகையில் பெர்லினில் அவர்களுக்காக நினைவுச்சின்னங்கள் அமைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார் Sevim.
ஜேர்மனியில் வாழும் 83 மில்லியன் மக்களில், 25 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |