பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார்
பெர்லினில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் கார் வைத்து மோதி தாக்குதலில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பெர்லின் தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் புகுந்த கார்
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தியர்கார்டன்(Tiergarten) பூங்கா பகுதிக்கு அருகில் நடைபெற்ற தன்பாலின ஈர்பாளர்கள் விழாவில் புகுந்த வெள்ளை நிற வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 29 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கார் மோதலை தொடர்ந்து கத்திக்குத்து தாக்குதலும் அரங்கேறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தாக்குதலை தொடர்ந்து இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் உறுதிப்படுத்தி இருந்தார்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தாக்குதல்தாரி
தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் நடந்த வன்முறை சம்பவத்தின் சந்தேகத்திற்குரிய நபரும், ஜேர்மன் குடிமகனுமான 21 வயது அப்துல் பலூத்(Abdul Ballout) காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெர்லினின் ஸ்பாண்டெள(Spandau) பகுதியில் காவல்துறையினரை தாக்க முயன்றதை அடுத்து பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

கொல்லப்பட்ட சந்தேக நபர் லெபனான் நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் அப்துல் பலூத்திற்கு தீவிரமான குற்ற பின்னணிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |