பெர்லின் தன்பாலின விழா கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: ஜேர்மன் சேன்சலர் எச்சரிக்கை

Berlin Friedrich Merz
By Arbin Jul 26, 2026 04:55 AM GMT
Report

பெர்லினின் புறநகர்ப் பகுதியில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களின் விழாவின் போது கார் ஒன்று அந்த மக்கள் மீது மோதியதில் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததுடன் 16 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கைது செய்யப்படவில்லை

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் உறுதி அளித்துள்ளார்.

பெர்லின் தன்பாலின விழா கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: ஜேர்மன் சேன்சலர் எச்சரிக்கை | Berlin Pride Van Crashes Into

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நடைபெற்றத் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், நகரின் இஸ்லாமியக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பெர்லின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் நிகழ்வுகளில் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தும்படி இந்தத் தாக்குதல் சம்பவம் கட்டாயப்படுத்தியுள்ளது.

அதி தீவிரமாக... தங்கத்தை வாங்கிக் குவிக்கும் உலக நாடுகள்: வெளியான காரணம்

அதி தீவிரமாக... தங்கத்தை வாங்கிக் குவிக்கும் உலக நாடுகள்: வெளியான காரணம்

சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்த கொடூரமான வாகன மோதல் மற்றும் கத்தியால் தாக்குதல் சம்பவங்களால் ஜேர்மனி மக்கள் பதற்றத்தில் இருக்கும் வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வெளிப்படையாகவே தாக்குதல் நடந்த நிலையில், பல மணி நேரங்களுக்குப் பிறகும் இதன் பின்னணி வெலியாகவில்லை, ஆனால் பிராண்டன்பர்க் கேட் அருகே உள்ள நகரின் மையப் பகுதியான டியர்கார்டன் பூங்காவிற்குள் வேகமாகப் புகுந்த அந்த வாகனம் பல பேர் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், காயமடைந்தவர்கள் பலர் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அன்று முன்னதாக நடைபெற்ற தன்பாலின மக்களின் அணிவகுப்புப் பாதைக்கு அருகில் உள்ள டியர்கார்டன் பூங்காவிற்குள், இரவு 10 மணிக்குச் சற்று முன்பு ஒரு வெள்ளை நிற வகானம் சென்று, நடைபாதையில் இருந்தவர்கள் மீது மோதியதுடன் ஒரு மரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெர்லின் தன்பாலின விழா கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: ஜேர்மன் சேன்சலர் எச்சரிக்கை | Berlin Pride Van Crashes Into

ஆனால் அதன் பின்னர் அந்த வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ளதாகவும், அந்த சாரதி அல்லது தாக்குதலில் ஈடுபட்டவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதனிடையே, தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஒரு நபர் வாகனத்திலிருந்து வெளியேறி நடந்தே தப்பிச் சென்றதாக ஒருவர் கூறியதை Bild நாளேடு மேற்கோள் காட்டியுள்ளது.

கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே 

ஞாயிற்றுக்கிழமையன்றும் ஜேர்மனியின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஹெலிகொப்டர்களை உள்ளடக்கிய தேடுதல் நடவடிக்கை தலைநகர் முழுவதும் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்தக் கொடூரமான செயல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படுவதையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதிசெய்யத் தானும் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட்-உம் வலியுறுத்துவோம் என்று சேன்சலர் மெர்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் தீவிர வெப்ப அலை தணிந்து, இதமானக் கோடை வெயிலில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் அணிவகுப்பைக் கொண்டாடுவதற்காக, தலைநகரில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.

பெர்லின் தன்பாலின விழா கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: ஜேர்மன் சேன்சலர் எச்சரிக்கை | Berlin Pride Van Crashes Into

இதனிடையே, இந்தக் கொடூரமான தாக்குதலை நமது சுதந்திரமான மற்றும் பன்னாட்டு சமூகத்தின் மீதான தாக்குதல் என்று பெர்லின் மேயர் கை வெக்னர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் இந்த விழாவினை கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே என்றே கொண்டாடுகின்றனர். அதன் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு ஜனநாயக ஆதரவு அரசியல் பேரணியுடன் தொடங்கின.

அந்நிகழ்ச்சிக்கு எதிராக நடைபெற்ற தீவிர வலதுசாரிப் பிரிவினரின் எதிர்-போராட்டத்தின்போது, ​​காவல்துறையின் உத்தரவுகளை மீறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US