கஷ்டப்படுவதாகக் கூறி அரசு உதவி பெற்ற சுவிஸ் தம்பதியர்: பொலிசார் அவர்கள் வீட்டை சோதனையிட்டபோது...
தாங்கள் கஷ்டப்படுவதாகக் கூறி அரசு உதவி பெற்ற ஒரு சுவிஸ் தம்பதியின் வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, உண்மையில் அவர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அரசு உதவி பெற்றுவந்த சுவிஸ் தம்பதியர்
சுவிட்சர்லாந்தின் Bern நகரில் வாழ்ந்துவரும், முறையே 71 மற்றும் 76 வயதுள்ள ஒரு தம்பதி, 2009ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை, தாங்கள் கஷ்டப்படுவதாகக் கூறி அரசு உதவி பெற்றுவந்துள்ளார்கள். அவர்கள் இதுவரை சுமார் 17 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அரசிடமிருந்து உதவித்தொகையாக பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.
பொலிசார் அவர்கள் வீட்டை சோதனையிட்டபோது...
இந்நிலையில், சமீபத்தில் பொலிசார் அந்த தம்பதியின் வீட்டை சோதனையிட்டார்கள். அப்போது, அவர்கள் வீட்டில், ஆடம்பர கைப்பைகள், ஃபர் கோட்கள் (fur coats) மற்றும் விலையுயர்ந்த ஒயின் முதலான பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அவர்கள், கோடீஸ்வரர்களாக வாழ்ந்துகொண்டே, அரசின் உதவியையும் பெற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |